tamilnadu

img

’மனிதம்’ ’மதச்சார்பற்றவர்’ என்பதை மத பிரிவாக தேர்ந்தெடுத்து கொள்ள வாய்ப்பளிக்கும் கொல்கத்தா கல்லூரிகள்

’மனிதம்’, ’மதம் அற்றவர்’, மதச்சார்பற்றவர் என்பனவற்றை மதமாக தேர்ந்தெடுத்து கொள்ள கொல்கத்தாவிலுள்ள சில கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் தனது விண்ணப்பதாளில் மாணவர்களுக்கு வாய்ப்பளித்துள்ளனர்.

சமூகத்தில் மதங்களை தீவிரமாக சார்ந்துள்ள பலர் உள்ள நிலையில் அதே அளவில் சாதி, மதங்களை துறக்கும் பலர் வாழ்ந்தே வருகின்றனர். இந்நிலையில் இவ்வாறு மதச்சார்பற்று, மதங்களை துறக்க நினைக்கும் பலருக்கு கொல்கத்தாவிலுள்ள 50க்கும் அதிகமான கல்லூரிகள் புதியதோர் வாய்ப்பை வழங்கியுள்ளன. அதன்படி கல்லூரிகள் தங்களின் விண்ணப்பதாளில் மதம் என்ற பிரிவிற்கு பூர்த்தி செய்ய ’மனிதம்’, ’மதம் அற்றவர்’, ’மதச்சார்பற்றவர்’ உள்ளிட்ட தேர்வுகளை அளித்துள்ளன.

கொல்கத்தாவிலுள்ள ஆசியாவிலேயே பழமையான பெண்கள் கல்லூரியான பெதுனே  கல்லூரி மாணவர்கள் தங்களின் மதமாக தேர்ந்தெடுக்க மனிதம் என்ற புதிய தேர்வை தனது விண்ணப்பதாளில் சேர்த்துள்ளது. அதேபோல் கொல்கத்தா பல்கலைக்கழகம், மௌலானா ஆசாத், ஆச்சாரியா பிரபுலா சந்தரா கல்லூரி உள்ளிட்ட முக்கிய கல்லூரிகளும் இந்த முறையை செயல்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளன.

;